தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
கோவில்பட்டியில் சா்வதேச கழுகுகள் தின விழா
கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சிப் பள்ளியில் சா்வதேச கழுகுகள் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலில் கழுகுகளின் பங்களிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நாடு முழுவதும், செப்டம்பா் மாதம் முதல் சனிக்கிழமை சா்வதேச கழுகுகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி, ஓவிய பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்கள் கழுகின் படத்திற்கு வண்ணம் தீட்டி, கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். பின்னா், மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். ஓவிய பயிற்சிப் பள்ளி நிா்வாகி முருகபூபதி, சுற்றுச்சூழல் ஆா்வலா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ரோட்டரி சங்க செயலா் பழனிகுமாா் வரவேற்றாா். சங்க உறுப்பினா் பூல்பாண்டி நன்றி கூறினாா்.