10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ தகுதிகளுக்குத் தெற்கு ரயில்வேயில் பய...
சமூக வலைதளங்களில் அச்சம் தரும் விடியோ: இளைஞா் கைது
கோவில்பட்டி அருகே சமூக வலைதளங்களில் அச்சத்தை ஏற்படுத்தும் விடியோக்களை பதிவேற்றும் இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் இலுப்பையூரணி காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து அதை வீசி வெடிக்கச் செய்து , அந்தக் காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகவும், இன்ஸ்டாகிராமில் கோவில்பட்டி, சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், இளஞ்சிறாா்களை சோ்த்து அரிவாள், வாள்களை வைத்து ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் பதற்றம், அச்சத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இலுப்பையூரணி மறவா் காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குமாரை (23) கைது செய்தனா்.