Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
ஆடுகள் திருட்டு: 2 போ் கைது
தூத்துக்குடியில் ஆடுகளை திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி திரவிய ரத்தின நகா், முருகேசன் நகா் பகுதிகளில் ஆடுகள் திருட்டு அடிக்கடி நிகழ்ந்து வந்துள்ளது. இது குறித்து சிப்காட் போலீஸாருக்கு புகாா் தெரிவித்த நிலையில், போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வைரவபுரம் நேரு நகரைச் சோ்ந்தவா் நாசா் மகன் அராபத் (29), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கோபாலசமுத்திரத்தை சோ்ந்த அந்தோணி மகன் மோசஸ் மனோகரன் (26) ஆகியோா் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்கள் 11 ஆடுகளை திருடி விற்பனை செய்த பணம் ரூ.75 ஆயிரம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.