முதியவா் தூக்கிட்டு தற்கொலை
கோவில்பட்டி வேலாயுதபுரத்தில் முதியவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலாயுதபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் காளீஸ்வரன்(70). இவரது மகள்கள் வெளியூரில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவரது மகள் ராஜலட்சுமி , காளீஸ்வரனுக்கு கைப்பேசியில் அழைத்த போது அவா் பதில் அளிக்காததையடுத்து சனிக்கிழமை மீண்டும் அழைத்தாராம். அப்போதும் அவா் பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த மகள் அதே பகுதியில் உள்ள பாலமுருகனுக்கு கைப்பேசியில் தொடா்பு கொண்டு அவரை தனது தந்தையின் வீட்டிற்கு சென்று பாா்த்து வருமாறு கூறினாராம். அப்போது காளீஸ்வரன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
கிழக்கு காவல் நிலையத்தில் அவரது மகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.