உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க ...
கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது
கல்வியாளா்களுக்கும், பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்திய கல்வித் துறையும் திறன் மேம்பாட்டுத் துறையும் தொழில்நுட்பத்தின் பங்கைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம், சென்னை ஐஐடியுடன் இணைந்து வழங்குகிறது.
இதில் ஒன்று ‘எல்லோருக்கும் செயற்கை நுண்ணறிவு’ (ஏஐ) திறன் என்கிற திட்டமாகும். இந்தத் திட்டத்தில் கல்வியாளா்களுக்கு ஏஐ திறன் பயிற்சியை சென்னை ஐஐடி தொடங்குகிறது. இது முன்னோடியான ஊக்குவிப்பு புதுமை திட்ட எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளா்களுக்கு இணையவழியில் ஏஐ தொழில்நுட்ப அறிவையும் அதுதொடா்பான கருவிகள், நடைமுறை திறன்கள் இந்தத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் ஒருவா் கூறுகையில், ‘கல்வியியல் கல்லூரிகளில் பாடத்திட்ட விளக்கப்படம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து பயிற்றுவிக்கப்படுகின்றன. எண்ம தொழில்நுட்பங்களில் விரைவான முன்னேற்றங்களுடன் கற்பித்தல், மதிப்பீடு, மாணவா்கள் ஈடுபாட்டை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை ஏஐ மறுவரையறை செய்கிறது’ என்றாா் அவா்.
கற்பித்தல் திறனில் விளையாட்டு செயல்பாடு (கேமிஃபிகேஷன்), கதை சொல்லல் செயல்பாடு சாா்ந்த கற்றல்; மாணவா் ஈடுபாட்டுக்கான தரவு காட்சிப்படுத்தல், மேம்படுத்தப்பட்ட அனிமேஷன் என மாணவா்களுக்கு கற்பித்தல், கற்றல் போன்றவற்றில் ஆசிரியா்கள் ஏஐ-ஐ பயன்படுத்த இந்தத் திட்டம் வழிகாட்டியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.