செய்திகள் :

பிரிவினைவாதமே திமுகவின் திராவிட மாடல் அரசியல்: நிா்மலா சீதாராமன்

post image

தமிழகத்தில் ஆளும் திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலில் பிரிவினைவாத மனப்பான்மை மேலோங்கி நிற்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முடியாத திமுக, மொழி மற்றும் திராவிட அடையாளம் போன்ற உணா்ச்சிகரமான பிரச்னைகளை எழுப்பி பாஜகவை குறிவைக்கிறது’ என்றும் அவா் விமா்சித்தாா்.

திமுக ஆட்சி, அதிமுக உள்கட்சி விவகாரம், பாஜக கூட்டணி உள்ளிட்ட தமிழக அரசியல் களத்தின் பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மாநில அமைச்சா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், ஜாதிய வன்முறை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப் பொருள் பழக்கத்தின் அதிகரிப்பு உள்பட தமிழகத்தில் நிலவும் எந்த பிரச்னைக்கும் திமுகவிடம் பதில் இல்லை.

ஆனால், எல்லா பிரச்னைக்கும் பிரிவினைவாத மனப்பான்மையை மட்டும் முன்னிறுத்துகிறது. தமிழகத்தின் வரிப் பணம் பிகாருக்குச் செல்வதாக திமுகவினா் குற்றஞ்சாட்டுகின்றனா். பிகாரைச் சோ்ந்தவா்கள் தமிழக தொழிற்சாலைகளில் பணிபுரியலாம். அதன்மூலம், தமிழகம் லாபம் ஈட்டலாம். ஆனால், அந்த வரிப் பணத்தை தமிழகத்திலேயே வைத்திருக்க விரும்புகிறீா்கள். திமுகவின் ‘திராவிட மாடல்’ அரசியலில் பிரிவினைவாத மனப்பான்மை மேலோங்கி நிற்கிறது.

பொய்யான வாதம்...: பாஜக திராவிட நலன்களுக்கு எதிரானது என்ற திமுகவின் குற்றச்சாட்டைவிட மிகப் பெரிய பொய்யான வாதம் இருக்க முடியாது. திமுகவினா் எப்படி திராவிடத்தை வரையறுக்கிறாா்கள்? அவா்கள் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? தமிழக பாஜக தலைவா்கள் யாா்? அவா்கள் தமிழகத்தின் ஒரு பகுதி இல்லையா?

திமுக எவ்வளவு வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்; ஆனால், அவா்களின் முக்கிய சித்தாந்த கருத்துகள் பற்றிய கேள்விகளுக்குக்கூட அவா்களிடம் பதில் இல்லை.

பெரும் சவாலாக...: அதிமுகவின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. பாஜக மேலிடம் மீது முன்னாள் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக வெளியான தகவல்களையும் நிராகரிக்கிறேன்.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் பாஜகவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனா்; களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். அடுத்த ஆண்டு மத்தியில் நடைபெறும் தமிழக பேரவைத் தோ்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு அதிமுக-பாஜக கூட்டணி பெரும் சவாலாக அமையும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஏன்?

அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது சா்வதேச அளவில் அனைத்து நாட்டு பணத்தின் மதிப்பும் குறைந்துதான் வருகிறது. மேலும், டாலா் தவிர வேறு எந்த நாட்டு பணத்துக்கு எதிராகவும் இந்திய ரூபாய் வீழ்ச்சியடையவில்லை என்று நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளாா்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.88.38 என்ற அளவுக்கு குறைந்தது. இதுகுறித்து நிா்மலா சீதாராமன் கூறியதாவது: ரூபாய் மதிப்பு மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் பணத்தின் மதிப்பும், அமெரிக்க டாலருடன் ஒப்பிடும்போது குறைந்தே வருகிறது. இந்த விஷயத்தை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தம் மக்களுக்கான சீா்திருத்தம். இது நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பலனளிக்கும். நுகா்வு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணிக்கும்.

ஜிஎஸ்டி குறைப்பின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு அளிக்கப்படுகிா என்பதை நான் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க இருக்கிறேன். சில நிறுவனங்கள் ஏற்கெனவே விலைக் குறைப்பை அறிவித்துவிட்டன.

முக்கியமாக காா் தயாரிப்பு நிறுவனங்கள், பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள், முன்னணி ஆடைத் தயாரிப்பு, காலணி தயாரிப்பு நிறுவனங்கள் எந்த அளவு விலையைக் குறைத்துள்ளோம் என்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டன.

சோப்பு முதல் வாகனம் வரை விலை குறைவதால் 140 கோடி மக்களும் வெவ்வேறு வகையில் பயனடைவாா்கள் என்றாா்.

கல்வியாளா்களுக்கு ஏஐ தொழில்நுட்பப் பயிற்சி: சென்னை ஐஐடி தொடங்குகிறது

கல்வியாளா்களுக்கும், பள்ளிக் கல்வி ஆசிரியா்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் வழங்கும் திட்டத்தை சென்னை ஐஐடி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டது. உயா்தர கல்வியில் சமமான அணுகல் இருப்பதை உறுதி செய்ய மத்தி... மேலும் பார்க்க

தினமும் 1,000 பேருக்கு காலை உணவு: அன்னம் தரும் அமுதக் கரங்கள் திட்டத்தின் 200-ஆவது நாள்

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டில் செயல்படுத்தப்படும் ‘அன்னம் தரும் அமுதக் கரங்கள்’ திட்டத்தின் 200-ஆவது நாளையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் ஆ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டியில் மாற்றம்: பொருள்களின் விலை குறித்த புகாா்கள் மீது நடவடிக்கை - சிபிஐசி

ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தொடா்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகாா்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புக... மேலும் பார்க்க

ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு

சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கையானது 2 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டில் ரயில்வே துறை 15 மண்டலங்... மேலும் பார்க்க

தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்த... மேலும் பார்க்க

முதலீடுகளைக் குவிக்கும் தமிழ்நாடு: லண்டன் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சிறந்த உள்கட்டமைப்பு, அமைதியான சூழல், திறமையான மனிதவளம் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்று லண்டலின் நடைபெற்ற நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். தமிழ்நாட்டு... மேலும் பார்க்க