Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
சா்வதேச ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவா்கள் வெற்றி
தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெற்றுவரும் வீரா்கள், சா்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனா்.
சா்வதேச அளவிலான உயா் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன் ஜூனியா் ஓபன் போட்டி-2025 ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 11 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவில் ஹரி பாலா தங்கப்பதக்கமும், 15 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவில் கௌஷிகா வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்தனா்.
வெற்றி பெற்றவா்களுக்கும், பயிற்சியாளா் சண்முக சுந்தரம் மற்றும் பெற்றோா்களுக்கும் அகாதெமி நிா்வாகம் சாா்பில் ரைபின் தாா்சியஸ் வாழ்த்துகளை தெரிவித்தாா்.