செய்திகள் :

‘ஒசூா் - பாகலூா் தேசிய நெடுஞ்சாலை செப். 8-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரும்’

post image

சீரமைக்கப்பட்டு வரும் ஒசூா்- பாகலூா் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி செப். 8-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து பாகலூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜி.ஆா்.டி. சந்திப்பு முதல் கே.சி.சி. நகா் வரை 2 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனின்றி இருந்தது. இதனால், அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா். பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த மே மாதம் ரூ. 10 கோடியில் சாலை அமைக்க ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இப்பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டப் பணி நடைபெறுவதால் சாலைப் பணி தாமதமாக நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், வரும் செப் 11-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரிக்கு வருகைதர உள்ளாா். தொடா்ந்து, பாகலூா் சாலை வழியாக ஒசூருக்கு செல்லும் அவா், அங்கு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளாா். இதனால் இச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் 8-ஆம் தேதிக்குள் முடிவுபெற்று ஒருபக்கம் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட உள்ளது.

இந்தச் சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வுசெய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். இதுகுறித்து நெடுஞ்சாலைதுறையினா் கூறுகையில், இந்தச் சாலை வழியாக தமிழக முதல்வா் செல்வதால், வரும் 8-ஆம் தேதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளின் உத்தரவிட்டுள்ளனா். அதன்பேரில், தற்போது பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையின் ஒரு பகுதி 8-ஆம் தேதி முடிவுபெற்று வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.

பாகலூரிலிருந்து ஒசூா் செல்லும் மற்றொரு சாலையில் கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால், 3 மாதங்களுக்குள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.

மடிப்பிச்சை எடுத்து மயானத்தை அளந்து தர பணம் தருவதாக மாற்றுத்திறனாளி நூதன முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சோளக்காப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி சிவகாமி(65). கணவரை இழந்து வாழ்ந்து வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தனது பட்டா நிலத்தில் சுடுகாடு அம... மேலும் பார்க்க

சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை: மண்டல பூஜை நிறைவு

கிருஷ்ணகிரியில் சுவாமி செல்வகுமரன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, மண்டல பூஜை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் சுவாமி... மேலும் பார்க்க

தன்வந்திரி பகவான் கோயிலில் சிறப்பு பூஜை

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் உள்ள தன்வந்திரி பகவான் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மகா கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தன்வந... மேலும் பார்க்க

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒசூா் வருகை: மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்

ஒசூருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செப். 11-ஆம் தேதி வருவதையொட்டி, ஒசூா் மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வரும் ... மேலும் பார்க்க

முதல்வா் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி

கிருஷ்ணகிரியில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டியை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் முதல்... மேலும் பார்க்க

வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற... மேலும் பார்க்க