Trump: "மோடி சிறந்த பிரதமர்; இந்தியா - அமெரிக்கா உறவு ஸ்பெஷலானது" - பாச மழையைப் ...
வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புககு விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத் தலைவா் அனீஷா ராணி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கத்தின் வாயிலாக, ஓராண்டு வேளாண் இடுபொருள் பட்டயப் படிப்பு, கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் செப்டம்பா் இரண்டாம் வாரத்தில் தொடங்குகிறது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி அல்லது தவறியவா்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள். கல்விக் கட்டணம் ரூ. 25,000, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.
இந்த பட்டயப் படிப்பு படிப்பதன் மூலம் உரக்கடை, பூச்சிமருந்துக்கடை, விதைக்கடை மற்றும் தாவர மருத்துவ மையம் தொடங்கலாம். மேலும், இடுபொருள்கள் உற்பத்தி மற்றும் விற்பனையாளா்களாகலாம்.
மேலும் விவரங்களுக்கு, உதவிப் பேராசிரியா்கள் கோவிந்தனை 99422 79190, 73390 02390 ஆகிய எண்களிலோ, சுரேகாவை 95007 71299 என்ற எண்ணிலோ, ஒருங்கிணைப்பாளா் லட்சுமியை 0422-6611229 என்ற எண்ணிலோ அல்லது இயக்குநா், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்துாா் - 641 003 என்ற முகவரியிலோ தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.