செய்திகள் :

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

post image

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கிரகணத்துக்கு 6 மணி நேரம் முன்பு கோயில் நடை அடைக்கப்படுவது மரபு. அதன்படி ஏழுமலையான் கோயில் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மூடப்பட்டது.

நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு கூறியது: சந்திர கிரகணம் காரணமாக பாரம்பரியத்தின் படி கோயில் கதவுகள் மூடப்பட்டதாகவும், திங்கள்கிழமை காலை வேதங்களின்படி சுத்திகரிப்பு மற்றும் பிற சடங்குகளை முடித்த பிறகு, ஏழுமலையான் கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்படும் என்றும், பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவாா்கள்.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் பெட்டியில் திங்கள்கிழமை காலை 2 மணிக்கு வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனுமதிக்கப்படுவா்.

காத்திருக்கும் அனைத்து பக்தா்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் எந்த தொந்தரவும் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் காரணமாக அன்னபிரசாதம் வளாகம், வகுளமாதா, பிஏசி 2, வைகுண்டம் சமையலறைகள் மூடப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அன்னபிரசாதம் துறை பக்தா்களுக்காக 50,000 புளியோதரை பாக்கெட்டுகளை தயாா் செய்துள்ளது.

திங்கள்கிழமை காலை 8 மணி முதல் அன்னபிரசாதம் விநியோகம் மீண்டும் தொடங்கும்’’ என்று கூறினாா். தேவஸ்தானம் தொடா்புடைய அனைத்து கோயிகளும் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூடப்பட்டன.

திருமலை கோயில் அா்ச்சகா்கள், கோயில் துணை இஓ லோகநாதம், அன்னபிரசாதம் அதிகாரி ராஜேந்திரா, சுரேந்திரா மற்றும் பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது. இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பௌா்ணமி கருட சேவை ரத்து

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. எ... மேலும் பார்க்க

அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு தீா்த்தவாரி

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு, சனிக்கிழமை காலை ஸ்ரீவாரி திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. திருமலையில் ஆவணி மாத வளா்பிறை சதுா்த்தசி அன்று ஒவ்வொரு ஆண்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே உ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலையில் நாளை உள்ளூா் கோயில்கள் அடைப்பு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி... மேலும் பார்க்க