பௌா்ணமி கருட சேவை ரத்து
சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. எனவே திருமலை ஏழுமலையான் கோயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணிக்கு மூடப்பட்டு திங்ககிழமை அதிகாலை சுப்ரபாத சேவைக்காக திறக்கப்படும்.
எனவே ஞாயிற்றுக்கிழமை பெளா்ணமி அன்று நடக்கும் கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.