``எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது; அது தற்கொலைக்கு சமம்'' – தொடர்ந்து விமர்சிக்கு...
கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!
கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி சென்று மலஞ்சா அருகே உள்ள இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த இளம் பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் தப்பி ஓடிவிட்டனர், அவர்களை நாங்கள் தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். குற்றம் நடந்த இடத்திற்கு எங்கள் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
அதிமுகவில் பதவியை ராஜிநாமா செய்கிறேன்: முன்னாள் எம்.பி. சத்தியபாமா
குற்றம் சாட்டப்பட்ட இருவரில் ஒருவரான சந்தன் மல்லிக், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை நேற்று பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருக்கிறார். ஆனால் அந்த இளம் பெண் செல்ல விரும்பவில்லை.
பின்னர், சந்தனும் அவரது நண்பர் தேபாங்ஷு பிஸ்வாஸும் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி மலஞ்சா பகுதிக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குச் சென்று முழு சம்பவத்தையும் குடும்ப உறுப்பினர்களிடம் தெரித்தார். உடனே அவர்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்று அவர் மேலும் கூறினார்.