Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
லபுஷேன் ஹாட்ரிக்: கோப்பையை வென்றது ரெட்லேண்ட்!
மார்னஸ் லபுஷேனின் அசத்தலான பந்துவீச்சினால் அவரது ரெட்லேண்ட் அணி இறுதிப் போட்டியில் வென்றது.
கேஎஃப்சி டி20 மேக்ஸ் தொடரில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லேன்ட் கிரிக்கெட் கிளப் நடத்தும் டி20 போட்டிகள் 2022 முதல் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடரின் 2025 சீசனில் இறுதிப் போட்டியில் வேல்லி அணியும் ரெட்லேண்ட் அணியும் மோதின.
முதலில் பேட் செய்த ரெட்லேன்ட் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜிம்மி பியர்சன் 102 ரன்கள் குவித்தார்.
அடுத்து விளையாடிய வேல்லி அணி 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்த அணியில் மேக்ஸ் பிரயண்ட் 76 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். மேலும், 3 கேட்ச்களைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
பேட்டரான மார்னஸ் லபுஷேன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரில் ஒரு போட்டியில் லபுஷேன் சதம் அடித்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.