செய்திகள் :

உத்தரப்பிரதேசப் பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கேங்க்: ட்ரோன்கள் மூலம் தேடும் போலீஸார்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள தெளரலா என்ற கிராமத்துப் பெண்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். தனியாகச் செல்லும் பெண்கள் முன்பு திடீரெனத் தோன்றும் நிர்வாண கேங்க் அவர்களை ஆளில்லாத இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சி செய்து வருகிறது. அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் முன்பு திடீரென வந்த இரண்டு பேர் அப்பெண்ணை அருகில் உள்ள தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றனர்.

அப்பெண் அவர்களிடம் போராடி தன்னை விடுவித்துக்கொண்டு வீட்டிற்கு ஓடி வந்துவிட்டார். அவர் ஓடி வந்து கிராமத்தினரிடம் புகார் செய்தார். கிராமத்தினர் அத்தோட்டத்திற்கு சென்று தேடிப் பார்த்தனர்.

ஆனால் யாரையும் காணவில்லை. அப்பெண்ணிடம் இரண்டு பேரும் எப்படி இருந்தார்கள் என்று விசாரித்தபோது இருவரும் ஆடை அணியாமல் நிர்வாணமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பிறகு அக்கிராமத்திற்கு வேலைக்கு செல்வதையே அப்பெண் கைவிட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்கிறார். இது போன்று நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. ஆனால் வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதி பெண்கள் வெளியில் சொல்லாமல் இருந்தனர் என்றும், இது நான்காவது சம்பவம் என்றும் அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமார் தெரிவித்தார். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது.

உடனே போலீஸார் சம்பவம் நடந்த கிராமத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். கிராமத்தை சுற்றி ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கின்றனர். ஆனால் இதுவரை யாரும் சிக்கவில்லை. அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெண் போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் விபின் தெரிவித்தார். முன்னதாக விபினும் சம்பவம் நடந்த கிராமத்தைப் பார்வையிட்டார். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் தனியாகச் செல்ல அச்சம் அடைந்துள்ளனர்.

பதிப்புரிமை மீறல்: ரூ.12,500 கோடி இழப்பீடு வழங்க, AI நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக... மேலும் பார்க்க

மான்கள் வேட்டை - விஐபிகளுக்கு விருந்து வைத்தார்களா? - திமுக நிர்வாகியை தீவிரமாக தேடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்ற... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது - பின்னணி என்ன?

4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது தங்க நகைகள் திருடப்பட்டதாக க... மேலும் பார்க்க

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகள... மேலும் பார்க்க

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க