பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது - பின்னணி என்ன?
4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது தங்க நகைகள் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது கிடைத்த சிசிடிவி காட்சிகளில், நகை திருட்டில் சம்பந்தமுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி (திமுகவைச் சேர்ந்தவர்) என தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது" என அண்ணாமலை உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து வருகின்றனர்.