Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
Madharaasi: ``சிவகார்த்திகேயனை டயர்ட் ஆக்கணும்னு நினைச்சேன், ஏன்னா'' - ஸ்டன்ட் இயக்குநர் கெவின்
'மதராஸி' திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்திய இந்த 'மதராஸி'க்கு புதுமையான ஆக்ஷன் வடிவத்தை தந்திருக்கிறார் ஆக்ஷன் டைரக்டர் கெவின். ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டன் சிவாவின் மூத்த மகன்தான் இவர்.

அவரை பேட்டி காண விரைந்தோம். நிறைந்த எனர்ஜியுடன் சுறு சுறுப்பாக பேசத் தொடங்கிய கெவின், "முருகதாஸ் சாருக்கு நான் முதலில் நன்றி சொல்லியாகணும். அவருடைய திரைக்கதையிலேயே ஆக்ஷன் எப்போதுமே கலந்திருக்கும்.
என்னுடைய வேலைகளைப் பார்த்துட்டுதான் முருகதாஸ் சார் என்னை இந்தப் படத்துக்குக் கூப்பிட்டார்." என்றார்.
உங்க அப்பா ஸ்டன் சிவா, இதுக்கு முன்னாடி முருகதாஸ் சார்கூட இந்தி மொழி 'கஜினி' படத்துல வேலை பார்த்திருக்கார்! இப்போ நீங்க அவருடன் இணைந்திருக்கீங்க. இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி?
'ஜெயிலர்' படத்துல நானும் அப்பாவும் இணைந்துதான் ஸ்டண்டுக்கான வேலைகள் செய்திருக்கோம்னு கேள்விப்பட்டு முருகதாஸ் சார் என்னை இந்தப் படத்துக்காக கூப்பிட்டார்.
'மதராஸி' ப்ராஜெக்ட்டிற்குள் வந்து நாங்க முதலில் டோல்கேட்டில் நடக்கிற ஆக்ஷன் காட்சிகளை படமாக்கினோம். அந்தக் காட்சி எடுத்து முடித்து அதை எடிட் பண்ணி சார்கிட்ட காமிச்சதும் அவர் ரொம்பவே ஹாப்பி ஆகிட்டார்.
அதை பார்த்தவர் 'ஜனவரி வரைக்கும் டேட் ப்ளாக் பண்ணீடுங்க. `சிக்கந்தர்' திரைப்படத்தின் ஆக்ஷனையும் நீங்களே பார்த்துக்கோங்க'னு சொன்னார்.
அது வாழ்க்கையை மாற்றிய தருணம். அன்னைக்கு நான் அவரைச் சந்திக்க கார்ல போயிருந்தேன். அவர் சொன்ன செய்தியில் நான் என்னையே முழுமையாக மறந்து நடந்து போகத் தொடங்கிட்டேன்.
முருகதாஸ் சாருக்கு மிகப்பெரிய நன்றிகள்! அவர் கொடுத்த வாய்ப்பை நிரூபிக்கணும்ங்கிற எண்ணம்தான் எனக்கு இருந்தது.

சிவகார்த்திகேயன் ஆக்ஷன் காட்சிகள் வரும்போது பயமாக இருக்கும்னு பேட்டிகளில் சொல்கிறாரே, அவரைக் கோரியோ பண்றது எப்படி இருக்கும்?
சிவகார்த்திகேயன் சார் அவருடைய 1000 சதவீதத்தைப் படத்துக்கு கொடுத்திருக்காரு. 100 சதவீதம்னு சொல்லமாட்டேன். ஏன்னா, அந்தளவுக்கு முழுமையாக உழைப்பை அவர் படத்திற்கு தந்திருக்காரு.
நாங்க சொல்ற ஒவ்வொரு ஸ்டண்ட் காட்சிகளையும் அவர் அப்படியே பண்ணல. அனைத்தையும் உள்வாங்கி கணகச்சிதமாக திரையில் பிரதிபலிச்சாரு.
எனக்கு எஸ்.கே. சாரையும், வித்யூத் சாரையும் டயர்ட் ஆக்கணும்ங்கிறதுதான் ஒரே எண்ணமாக இருந்தது. ப்ரஷ்ஷாக இருந்தால் அவங்ககிட்ட நான் பெர்ஃபெக்ஷன் எதிர்பார்க்க முடியாது.
ஆனா, அதுவே கொஞ்சம் சோர்வாகிட்டால், இருடா சீக்கிரம் சரியாக முடிக்கிறேங்கிற' எண்ணம்தான் இருக்கும். அதுக்காக நான் சில முயற்சிகளைச் செய்திருந்தேன்.
என்னுடைய அப்பா எனக்கு சில விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கார். அவர் 'பிதாமகன்' படத்துல விக்ரம் சார் கேரக்டருக்கு சில விஷயங்கள் விலங்குகள்கிட்ட இருந்து எடுத்து வச்சிருப்பார்.
அப்படியான ஒரு முறையை நான் 'மதராஸி' எஸ்.கே. சார் கேரக்டருக்கு முயற்சி செய்திருக்கேன். அதுதான் ப்ரோ அனிமல் இன்ஸ்டிங்க்ட்'.
வித்யூத் ஜாம்வால் செய்யாத ஆக்ஷன்களை தேடி புதுசா திரையில காட்டுவதே உங்களுக்கு பெரிய சவாலாக இருந்திருக்குமே!
ஆமா, அவருடைய 'கமாண்டோ' படத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன். `துப்பாக்கி' படத்தோட வில்லன் இன்னைக்கு இங்க திரும்ப வர்றாரு, அந்தப் படத்துக்கு நான்தான் ஆக்ஷன் ஹீரோ என்பதே எனக்கு ரொம்ப பெரிய விஷயம். இந்தப் படத்தோட அவருடைய அறிமுக காட்சியில் அவர் செய்திருக்கும் சிங்கிள் ஷாட் ஸ்டண்ட் சீனுக்கு அபாரமான உழைப்பைக் கொடுத்திருக்காரு.
சில ஸ்டண்ட்களையெல்லாம் ஹாலிவுட் நடிகர்கள்தான் செய்வாங்கனு ஒரு எண்ணம் இருந்தது. ஆனால், அதையெல்லாம் தகர்த்து தூக்கிப் போட்டு அனைத்து ஸ்டண்ட்களையும் வித்யூத் சார் செய்வாரு.

`டான்சிங் ரோஸ்' ஷபீர் பல கலைகளை கத்து வைத்திருக்கிறார். அவரைக் கோரியோ செய்வது உங்களுக்கு ஈஸியா இருந்ததா?
ஆமாங்க, அவரை மாதிரி கடினமாக உழைக்கும் நடிகரை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததே கிடையாது.
டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்துக்கு ஏன் அப்படியான பெயர் கிடைச்சதுனு எனக்கு இந்தப் படத்துல வேலை பார்க்கும்போதுதான் தெரிஞ்சது.
நம்ம ஒரு விஷயத்தை சொல்வோம். ஆனால், அவர் பெட்டரான ஒரு வெர்ஷனை கொண்டு வருவார். அதுதான் ஷபீர் அண்ணா.

இலங்கையில் க்ளைமாக்ஸ் காட்சியை எடுக்கும்போது, கேமராமேனுடைய விரல் கட் ஆனதாக முருகதாஸ் சார் சொல்லியிருந்தாரே! அன்னைக்கு என்ன நடந்தது?
கேமராமேன் சுதீப் சாரைப் பத்தி சொல்லியாகணும். அவ்வளவு பக்கபலமாக இருப்பார். ஒரு ஆக்ஷன் டைரக்டர் ஒரு ஸ்டண்ட் காட்சியை படம் பிடித்தால் எவ்வளவு வேகமும் எனர்ஜியும் தெரியுமோ, அது அவர்கிட்ட தெரியும். இலங்கையில் கடினமாக ஒரு வானிலையில் தான் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம்.
ட்ரோன் கேமரா வீசிய பயங்கரமான காற்றுக்கு எங்கெங்கோ பறந்தது, அதை யார் மேலையும் ஹிட் ஆகிவிடக் கூடாது என இவர் பிடிக்கதான் ஓடினார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த சமயத்தில் ஒரு பக்கமாக காற்று பலமா அடிச்சு ஒரு விரலில் அந்த ட்ரோன் ரெக்கைப் பட்டு விரலை கட் பண்ணிடுச்சு. இப்படி படத்துக்காக உழைச்ச அவர் அதிரடியான அட்வென்சுரஸ் கேமராமேன்தான்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...