நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!
காந்தி கண்ணாடி: "கஷ்டப்பட்டு உழைத்த பணத்துலத்தான் உதவி பண்றேன்" - விமர்சனங்களுக்கு KPY பாலா பதில்
`கலக்கப் போவது யாரு', `குக்கு வித் கோமாளி' போன்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் KPY பாலா.
தற்போது ஷெரீஃப் இயக்கத்தில் விவேக்-மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் 'காந்தி கண்ணாடி' படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இப்படம் நேற்று (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியானது. தவிர பல கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, குழந்தைகளைப் படிக்க வைப்பது எனத் தொடர்ந்து சமூக சேவை செய்து வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களைச் சந்தித்த KPY பாலாவிடம், "நீங்கள் பணம் வாங்கி உதவுவதாக வரும் விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்குப் பதிலளித்த பாலா, "இதுவரைக்கும் நான் யார்கிட்டேயும் ஒரு ரூபாய்கூட வாங்கி உதவி பண்ணல.
இரவு பகலா கஷ்டப்பட்டு உழைச்சு சொந்தக்காசுலதான் பண்றேன். இதற்கு மேலையும் யார்கிட்டையும் காசு வாங்கி உதவி பண்ணமாட்டேன்.

ஒரு சதவீத மக்களை என்னைய விமர்சித்தாலும் 99 சதவீத மக்கள் அதற்கான பதிலைச் சொல்லிறாங்க. அதனால நான் எதுவும் சொல்ல விரும்பல.
நான் இங்க நிக்குறதுக்கு ஒரே காரணம் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களுக்கு எப்போதுமே நன்றியுள்ளவனாகத்தான் இருப்பேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...