என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
எச்சில் துப்பிய விவகாரம்: இன்டர் மியாமி வீரருக்கு 6 போட்டிகளில் விளையாட தடை!
பயிற்சியாளர் மீது எச்சில் துப்பிய விவகாரத்தில் இன்டர் மியாமி வீரர் லூயிஸ் சௌரஸுக்கு 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே அவர் மன்னிப்பு கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியிடம் 0-3 என தோல்வியுற்றது.
போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களுக்கும் மோதலில் ஈடுபட்டார்கள். அதன் நீட்சியாக, லூயிஸ் சௌரஸ் எதிரணியின் பயிற்சியாளர் ஒருவர் மீது எச்சில் துப்பினார்.
இதற்காக அவரைப் பலரும் விமர்சித்தார்கள். பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில், அடுத்த சீசனில் லீக்ஸ் கோப்பையில் 6 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்எல்எஸ் தொடரில் இந்தத் தடை இல்லாவிட்டாலும் அபராதம் எதுவும் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.