செய்திகள் :

10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு

post image

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.

அறிவிப்பில் சென்னை மெட்ரோ கூறுகையில்,

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் செப். 9 முதல் செப். 19 வரை மாற்றம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.

பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

பராமரிப்புக் காலக்கட்டத்தில் காலை 5 மணிமுதல் 6.30 மணிவரையில் ரயில் இயக்கப்படும் நேரங்கள் 7 நிமிட இடைவெளியிலிருந்து 14 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 6.30 மணிக்குமேல் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி ரயில்கள் இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

CMRL will be carrying out Rail Grinding Track Maintenance activity on both the Green Line and Blue Line

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு போதைப் பொருள்களே காரணம் என்று முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அத... மேலும் பார்க்க

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய அரசு பள்ளி ஆசிரியா்கள் விவரம் கணக்கெடுப்பு!

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய வர்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளில் பள்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு கிளம்பும்நிலையில், மற்றொரு புறம் கொண்டாடியும் வருகின்றனர்.அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் அதிமுக பல்வேற... மேலும் பார்க்க

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு என்பது சர்வாதிகார உச்சநிலை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பதவிகளிலும் இருந்து நீக்கியது தொடர... மேலும் பார்க்க

நாளை(செப். 7) சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 ரயில்கள் ரத்து!

பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(செப். 7) இரவு சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொன்னேரி ப... மேலும் பார்க்க

தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, செப். ... மேலும் பார்க்க