செய்திகள் :

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!

post image

புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு - பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று(செப். 6) சந்தித்துப் பேசினர்.

குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜகதீப் தன்கா் கடந்த ஜூலையில் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆகஸ்ட்டில் ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதனைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கிய இந்திய தேர்தல் ஆணையம், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனிடையே, சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை(ஆக. 31) தொடங்கி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி பங்கேற்றார். அப்போது, இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தனா்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இன்றைய சந்திப்பின்போது, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PM Narendra Modi calls on President Murmu

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

உத்தர பிரதேசத்தில் பெண்களை கடத்த முயற்சிக்கும் நிர்வாண கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.உத்தர பிரதேச மாநிலத்தில் பராலா கிராமத்தில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை நிர்வாணமாக ஓடிவந்த இரு ஆண்க... மேலும் பார்க்க

குஜராத்: 2,600 அடி உயர மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்து விபத்து: 6 பேர் பலி!

குஜராத்தில் கடல் மட்டத்திலிருந்து 2,600 அடி உயரத்தில் அமைந்துள்ள பாவாகத் மலைக் கோயிலில் ரோப்காரின் கேபிள் அறுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் அம... மேலும் பார்க்க

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மொத்தம் 50 சதவீதம் வரியை வி... மேலும் பார்க்க

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் மோசடியில் ஈடுபட்டதாக 11 தேர்வர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் சான்றிதழ் மோசடியில் ஈடுபட்டு நீட் தேர்வு மதிப்ப... மேலும் பார்க்க

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப்: தில்லி அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மாநில மக்களுக்கு தில்லி அரசு தரப்பிலிருந்து ரூ. 5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.கனமழை, வெள்ளத்தால் பஞ்சாப், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு-... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பொறியாளர் ரஷீத் வாக்களிக்க அனுமதி!

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லாவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. பொறியாளர் ரஷீத் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் குடியரசுத் துணைத் தல்வர் தேர்தலில் வாக்களிக்க தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் பார்க்க