Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
2-ஆவது டி20: ஜிம்பாப்வேயிடம் இலங்கை மோசமான தோல்வி!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டி20 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அபார வெற்றி பெற்றது.
ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 80 ரன்களுக்கு சுருண்டதால் ஜிம்பாப்வேயின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.
இலங்கை பேட்ஸ்மென்களை திணறடித்த ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர்களால் இலங்கை அணி பவர்-பிளே ஓவர்களில் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமக ப்ராட் இவான்ஸ், கேப்டன் ராசா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முஸாராபானி 2 விக்கெட்டுகளையும், சியான் வில்லியம்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
இதையடுத்து, இரண்டாவதாக பேட்டிங் செய்த ஜிம்பப்வே 14.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.