``செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?
பதவி பறிப்பு மசோதா: ``INDIA கூட்டணியில் அதிக குற்றப்பின்னணி இருக்கும் கட்சி திமுக'' - ADR அறிக்கை
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி அரசு, நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் பதவி நீக்க மசோதாவை அறிமுகப்படுத்தியது.
அதில், “ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தொடர்ச்சியாக 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது, காவலில் எடுக்கப்பட்ட 31-வது நாளில் நடைபெற வேண்டும்” என்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்திருந்தனர்.

இருப்பினும், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு (JPC) அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டு குழு சமர்ப்பிக்கும்.
எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபனைகளை நாடாளுமன்றக் கூட்டு குழு முன் பதிவு செய்யலாம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் கண்காணிப்புக் குழுவான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms - ADR) இந்தியாவின் மத்திய - மாநில அமைச்சர்களின் கொலை மற்றும் ஆட்கடத்தல் போன்ற கடுமையான குற்றங்கள் உள்பட அவர்களின் குற்றப்பின்னணி குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
27 மாநில சட்டமன்றங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையின் கீழ் உள்ள 643 அமைச்சர்களை உள்ளடக்கி நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 302 பேர் (47%) தங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் தங்களுக்கு எதிராகக் குற்ற வழக்குகள் இருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
இதில் 174 அமைச்சர்கள் கொலை, ஆட்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

அந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள்:
ஆளும் கூட்டணி (NDA)
பாரதீய ஜனதா கட்சி (BJP):
மொத்த அமைச்சர்கள்: 336
குற்றப்பதிவுகள்: 136 (40%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 88 (26%)
தெலுங்கு தேசம் கட்சி (TDP):
மொத்த அமைச்சர்கள்: 23
குற்றப்பதிவுகள்: 22 (96%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 13 (57%)
எதிர்க்கட்சி கூட்டணி (INDIA)
காங்கிரஸ்:
மொத்த அமைச்சர்கள்: 61
குற்றப்பதிவுகள்: 45 (74%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 18 (30%)
ஆம் ஆத்மி கட்சி (AAP):
மொத்த அமைச்சர்கள்: 16
குற்றப்பதிவுகள்: 11 (69%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 5 (31%)

திரிணமூல் காங்கிரஸ் (TMC):
மொத்த அமைச்சர்கள்: 40
குற்றப்பதிவுகள்: 13 (33%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 8 (20%)
திராவிட முன்னேற்றக் கழகம் (DMK):
மொத்த அமைச்சர்கள்: 31
குற்றப்பதிவுகள்: 27 (87%)
கடுமையான குற்றச்சாட்டுகள்: 14 (45%)
'இந்தியா' கூட்டணியில் அதிகபட்ச சதவீதத்துடன் குற்றப்பிண்ணனி இருக்கும் அமைச்சர்கள் இருக்கும் மாநில கட்சி திமுக என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.