பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
கூமாப்பட்டியில் நெல் நடவு செய்ய, கொல்கத்தாவில் இருந்து வடமாநிலத்தினர் வருகை!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வத்திராயிருப்பு பகுதி அமைந்துள்ளது. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோவிலாறு அணை என இரண்டு அணைகள் உள்ள இந்த பகுதியில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், மகாராஜபுரம், கூமாப்பட்டி, ரகுமத்நகர் ஆகிய பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.
வத்திராயிருப்பு பகுதியில் ஆண்டுதோறும் கோடை மற்றும் காலம் என இரண்டு முறைகள் நெல் விவசாயம் நடக்கிறது.

இந்த நிலையில், தற்போதைய காலமுறை நெல் விவசாய பணிகளை மேற்கொண்டுவரும் விவசாயிகள், நெல் நடவு பணிகளுக்கு கொல்கத்தா மற்றும் வடமாநிலத்திலிருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கொண்டு, விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் போதுமான விவசாயிகள் கிடைக்காததால், தற்போது வடமாநிலத்தினரை குறைந்த விலையில் பயன்படுத்தி நெல் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.