பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!
நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் போஸ்டரை அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக விஜயா சதீஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே, ட்ரிப், தூக்குத்துரை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் செல்வராகவன் தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.
இந்தப் படத்தில் ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, கௌசி ரவி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
முதல்முறையாக தனுஷை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வராகவன்தான். தற்போது அவர் நடித்துள்ள இந்தப் பட போஸ்டரை வெளியிடும் அளவுக்கு தனுஷ் முன்னேறியுள்ளார்.
When dreams meet despair, and resilience rises from pain… a story rooted in the soil begins ⚡
— Dhanush (@dhanushkraja) September 7, 2025
Unveiling Title & First Look of@selvaraghavan's #ManithanDeivamagalam@dennisfilmzone@VyomEntOfficial#VijayaSathish@KusheeRavi#Kausalya#YGeeMahendran@mimegopi#RSSatiz… pic.twitter.com/YkYjwBYl6M