எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
சூப்பர் ஸ்டாரான கல்யாணி பிரியதர்ஷன்: லோகா 365 காட்சிகள் அதிகரிப்பு!
லோகா திரைப்படத்தின் வ்சூல் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படம் ஆக.28ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் வெளியாகி அசத்தி வருகிறது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹ்ந்தி ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் சூப்பர்ஹீரோ கதையாக உருவான இப்படம் வசூலில் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ளது.
முன்னணி நடிகைகளின் படம்கூட இவ்வளவு வசூலிக்காத நிலையில், கல்யாணிபிரியதர்ஷனியின் படம் இவ்வளவு வசூலித்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இரவுக் காட்சிகளில் கூடுதலாக 365 காட்சிகளை அதிகரித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.