பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!
உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.
40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் ஜாவோ பெலிக்ஸ் 10, 61ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ரொனால்டோ 21,46-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
RONALDO BROTHER YOU ARE 40
— CristianoXtra (@CristianoXtra_) September 6, 2025
pic.twitter.com/CzhnDDTcg6
ஜாவோ கன்செலோ 32-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார். இந்தப் போட்டியில் 72 சதவிகித பந்தினை போர்ச்சுகல் அணி தன் கட்டுக்குள் வைத்திருந்தது.
குரூப் எஃப் அணிகளில் முதல் அணியாக போர்ச்சுகல் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
ரொனாடோ மொத்தமாக 942 கோல்களும் சர்வதேச போட்டிகளில் 140 கோல்களையும் நிறைவு செய்துள்ளார்.
மறைந்த வீரருக்கு மரியாதை
கார் விபத்தில் மறைந்த தியாகோ ஜோடாவிற்கு போர்ச்சுகல் அணியினரும் ரசிகர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
கோல் அடுத்து சில வீரர்கள் ஜோடாவின் பாணியில் கொண்டாடிதும் சமூக வலைதளத்தில் வைரலானது.