செய்திகள் :

அன்பும் நன்றியும்... மம்மூட்டி பகிர்ந்த பதிவு!

post image

நடிகர் மம்மூட்டி பகிர்ந்த புதிய பதிவு ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது உடல்நிலை குறித்து வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 74 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இருக்கிறார். இதனால், ரசிகர்கள் பலரும் 74 வயது இளைஞன் என்றே செல்லமாக அழைத்தும் வருகின்றனர்.

இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான பசூகா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியான தோல்வியைச் சந்தித்தது.

தற்போது, களம் காவல் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக, மோகன்லாலுடன் பேட்ரியாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் பாதித்ததாக வதந்திகள் பரவின. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

துல்கரிடம் இது குறித்து கேட்டபோது, “லோகா படத்தைப் பற்றி பேசலாம்” எனக் கூறினார்.

வழக்கமாக, ஒன்றிரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கும் மம்மூட்டி, கடந்த சில மாதங்களுக்கும் ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பு காரணமாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

தற்போது, தனது எக்ஸ் பக்கத்தில் மம்மூட்டி தனது புகைப்படத்தைப் பகிர்ந்து, “கடவுளுக்கும், அனைவருக்கும் அன்பும் நன்றியும்” எனக் கூறியுள்ளார்.

A new post shared by actor Mammootty has delighted fans.

நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆஹா கல்யாணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிறகடி... மேலும் பார்க்க

விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்: த்ரிஷா

நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடச... மேலும் பார்க்க

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

நடிகர் செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் போஸ்டரை அவரது தம்பியும் நடிகருமான தனுஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. விஒய்ஓஎம் என்டர்டெயின்மென்ட்ஸ் சார... மேலும் பார்க்க

ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகலின் அணி 5-0 என அபார வெற்றி பெற்றது. 40 வயதிலும் ரொனால்டோவின் அசத்தலான கோல்களால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அர்மீனியாவில் நடைபெற்ற உலகக் ... மேலும் பார்க்க

இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் அறிமுக போஸ்டர்!

இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.இட்லி கடை படத்தினை நடிகர் தனுஷ் அவரே இயக்கி கதாநாயகனாகவும் நடி... மேலும் பார்க்க

சூப்பர் ஸ்டாரான கல்யாணி பிரியதர்ஷன்: லோகா 365 காட்சிகள் அதிகரிப்பு!

லோகா திரைப்படத்தின் வ்சூல் ரூ.150 கோடியைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் ஆக.28ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் வெளியாகி அசத்தி வருகிறது. நட... மேலும் பார்க்க