Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!
ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆஹா கல்யாணம் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அதிலும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, அய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ஆஹா கல்யாணம். இத்தொடரில் நடிகை அக்ஷயா கந்தமுதன் நாயகியாகவும் விக்ரம் ஸ்ரீ நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
மேலும் நடிகை மெளனிகா, விபிஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ, பவ்யா ஸ்ரீ, ஆர்.ஜி. ராம், ஆடிட்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், ஆஹா கல்யாணம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும் இறுதிக்கட்டக் காட்சிகளின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2023 ஆம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர், 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்: த்ரிஷா