முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!
மதராஸி படத்தின் வசூல் இரண்டு நாள்களில் ரூ.50 கோடியைத் தாண்டியதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்நாளில் ரூ.12.8 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 கோடி என படக்குழு கூறியுள்ளது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் மதராஸி திரைப்படம் செப்.5ஆம் தேதி வெளியானது.
அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாவதால் அதீத எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் புரமோஷன் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது.
படம் வெளியான பிறகு நல்ல விமர்சனம் வருவதால் முன்பதிவுகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
CARNAGE AT THE BOX OFFICE #Madharaasi collects a gross of 50 CRORES in 2 days worldwide ❤❤
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 7, 2025
The madness continues with superb bookings on Day 3
Book your tickets now!
️ https://t.co/DiYIeLe7q1#MadharaasiMadness#Madharaasi#BlockbusterMadharaasipic.twitter.com/ADjfp5Ai0n