சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு
சந்திரகிரகணத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலின் நடை ஞாயிற்றுக்கிழமை நான்கு மணிக்கு சாத்தப்பட்டது.
சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுவதை யொட்டி தமிழக முழுவதும் பல்வேறு கோயில்கள் நடை சாத்தப்பட்டு வருகின்றன.
இதே போல் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் வழக்கம்போல் இரவு 8 மணிக்கு அர்த்த சாம பூஜைகள் நிறைவு பெற்று இரவு 9:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
இந்நிலையில் சந்திரகிரகணத்தையொட்டி மாலை 4 மணிக்கே அர்த்த சாம பூஜைகள் நிறைவு பெற்று நடை சாத்தப்பட்டது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை
இதனையடுத்து கோயில் வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இன்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
ஆனால் கோயில் நடை சாத்தப்பட்டதால் ஏமாற்றுத்துடன் சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்.