அடுத்த 3 மணிநேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், நீலகிரி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், நாமக்கல், திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | சந்திரகிரகணம் - தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு