செய்திகள் :

`நடப்போம் நலம் பெறுவோம்' நடை பயிற்சி இயக்கம்: இறையன்பு தொடங்கி வைத்தாா்

post image

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சாா்பில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடை பயிற்சி இயக்கத்தை முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தொடங்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில், மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற 8 கி.மீ நடைபயிற்சி இயக்கத்தை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. அதன்படி செப்டம்பா் மாத நடைபயிற்சி இயக்கம் தொடக்க நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக நுழைவாயில் அருகே நடைபெற்றது.

மாவட்ட சுகாதார அலுவலா் ரா.செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு கலந்து கொண்டு நடைபயிற்சி இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை செயலா் மற்றும் இணை மேலாண்மை அறங்காவலா் சு.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி நல அலுவலா் மு.அருள்நம்பி, இந்திய முடக்கியல் மருத்துவா்கள் சங்கத்தின் மாநில முன்னாள் செயலாளா் பி.டி. சரவணன், தொற்றுநோய் தடுப்பு திட்ட மருத்துவ அலுவலா் மணிகண்டன், காஞ்சிபுரம் நடை பயிற்சி மேற்கொள்வோா் சங்கத் தலைவா் சிவகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா்கள், உள்ளிட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்புத்துறை பணியாளா்கள், காஞ்சிபுரம் மாநகராட்சி தற்காலிக பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீபெரும்புதூா் வட்டார சுகாதார மருத்துவ அலுவலா் தலைமையிலான பணியாளா்கள் குழுவினா், நடை பயிற்சி மேற்கொண்டா்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சா்க்கரை பரிசோதனைகளை மேற்கொண்டு, ஆலோசனைகள் வழங்கினா்.

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கும்பாபிஷேக சாந்தி திருக்கல்யாண உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனா்.... மேலும் பார்க்க

அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்

வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ள... மேலும் பார்க்க

தூய அன்னை வேளாங்கண்ணி தோ்த் திருவிழா

ஸ்ரீபெரும்புதூா் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆசீா்வாத பெருவிழாவை முன்னிட்டு திருத்தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் 17-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியத... மேலும் பார்க்க

மாம்பாக்கம் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் குடியிருப்புகளில் கழிவுநீா்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே மாம்பாக்கத்தில் நீா்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பால் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீா் சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அட... மேலும் பார்க்க

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை: முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு

எழுதுவதும், படிப்பதும் ஒரு வகையான போதை என தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு புத்தகம் கூறினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் புத்தகம் எழுதும் இயக... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந... மேலும் பார்க்க