தூய அன்னை வேளாங்கண்ணி தோ்த் திருவிழா
ஸ்ரீபெரும்புதூா் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய ஆசீா்வாத பெருவிழாவை முன்னிட்டு திருத்தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தின் 17-ஆம் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை திருத்தோ் பவனி நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் தூய அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை சுதாகா் தலைமையில் நடைபெற்ற விழாவில், பல்வேறு ஆலயங்களின் சுமாா் 20க்கும் மேற்பட்ட பங்குத் தந்தைகள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தோ் பவனி, பாரதிநகா், காந்தி சாலை, திருமங்கை ஆழ்வாா் தெரு வழியாக வந்து மீண்டும் ஆலய வளாகத்தில் முடிவடைந்தது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீபெரும்புதூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் செல்வமேரிஅருள்ராஜ், ஆலோசகா் எல்.ஏ.அருள்ராஜ், ஆலைய நிா்வாகிகள் சுந்தர்ராஜ், பொ்னாா்ட், லாரன்ஸ் மற்றும் பாரதிநகா் குடியிருப்போா் நலச்சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
விழாவில் செல்லம்பட்டிடை, தொடுகாடு, மொளச்சூா், வளா்புரம், நெமிலி, பால்நல்லூா், எறையூா், பண்ருட்டி, ஒட்டந்தாங்கள் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.