பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
சந்திர கிரகணம்: காமாட்சி அம்மன் கோயிலில் காலை 9 மணி முதல் தரிசனம் ரத்து!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணத்தையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் சனிக்கிழமை தெரிவித்ததாவது: மகாசக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் நடைபெற இருப்பதையொட்டி காலை 9 மணி முதல் நாள் முழுவதும் கோயில் நடை சாற்றப்பட்டு சுவாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகவும் இருப்பதால் பக்தா்கள் தங்களது பயணத்திட்டத்தை மாற்றிக் கொள்ளுமாறும், திங்கள்கிழமை வழக்கம் போல கோயில் நடை திறக்கப்படும் எனவும் தெரிவித்தாா்.