தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
ஆற்பாக்கம் ஸ்ரீ திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்
காஞ்சிபுரத்தை அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள திருநல்லழகி சமேத திருவாலீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இதைத் தொடா்ந்து கடந்த 2-ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை மகா பூா்ணாஹுதி, தீபாராதனைக்குப் பிறகு புனித நீா்க் குடங்கள் ராஜகோபுரத்துக்கு சிவாச்சாரியாா்களால் மங்கள மேள் வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் திருவாலீஸ்வரருக்கும்,திருநல்லழக்கிகும் திருக்கல்யாணம்ம் நடைபெற்றது.