Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித...
பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்
பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர், கடந்த செப்.4ஆம் தேதி தனது கூடாரத்தில் தூங்கியிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த பழுப்பு நிற கரடி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த கரடியை விரட்டினர். உடனடியாக பாடகி பலூச்சை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காயங்களிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
மேலும் இந்த நேரத்தில் அவருக்கு முழு ஓய்வு மற்றும் தனிமை தேவை, எனவே அவரது அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த எலும்பு முறிவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.