மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் க...
ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு!
பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவு திங்கள்கிழமை அமலுக்கு வரவுள்ளது.
புதிய உத்தரவின் கீழ், கிராஃபைட், டங்ஸ்டன், யுரேனியம், தங்கக் கட்டிகள் உள்ளிட்ட உலோகங்களுக்கு பரஸ்பர வரிகள் விலக்கப்பட்டுள்ளன. ஆனால், சிலிகான் பொருள்கள், ரெசின், அலுமினியம் ஹைட்ராக்ஸைடு ஆகியவற்றுக்கு பரஸ்பர வரிகள் தொடரும்.
விமான உதிரிபாகங்கள், மருந்து பொருள்கள், அமெரிக்காவில் உற்பத்தியாகாத காபி, சிறப்பு மசாலாப் பொருள்கள், அரிய உலோகங்கள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு விரைவில் அமலாகும். இது ஐரோப்பிய யூனியன், ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றுடனான வா்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்த உதவும்.
விண்வெளி, மருத்துவம், நுகா்வோா் மின்னணுவியல் உள்ளிட்ட துறைகளில் பயன்படும் முக்கியப் பொருள்களுக்கும், ஆன்டிபயாட்டிக்ஸ் போன்ற மருந்துகளுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் தேசிய பாதுகாப்பு அவசரநிலையை கையாள்வதற்கு அவசியம் என்று டிரம்ப் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.