பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது குண்டு வெடிப்பு- ஒருவர் பலி!
3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!
நடப்பு சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்ற தென்னாப்பிரிக்க அணி சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் செல்லவிருக்கிறது.
கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்-ஷிப்பில் 14 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டியில் தோல்வி உள்பட 9 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தைப் பிடித்தது.
2025 - 2027 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரை துவங்கும் விதமாக தென்னாப்பிரிக்காவை பாகிஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
இந்தச் சுற்றுப் பயணத்தில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி துவங்குகிறது.
ராவல்பிண்டியில் 2-வது டெஸ்ட் மட்டுமின்றி, முதலாவது டி20 போட்டியும் நடைபெறுகிறது. மீதமுள்ள டி20 போட்டிகள் லாகூரில் நடைபெறுகின்றன.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை பைசலாபாத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சர்வதேச போட்டிகளை நடத்தப்படவுள்ளன.
மே மாதம் வங்கதேசத்திற்கு எதிரான பாகிஸ்தானின் இரண்டு டி20 போட்டிகளை பைசலாபாத் நடத்தவிருந்தது. ஆனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்ப் பதற்றங்கள் காரணமாக அந்த ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டிகள்
முதல் டெஸ்ட் - அக். 12-16, லாகூர்
2 வது டெஸ்ட் - அக். 20-24, ராவல்பிண்டி
முதல் டி20 - அக். 28, ராவல்பிண்டி
2 வது டி20 - அக். 31, லாகூர்
3 வது டி20 - நவ. 1, லாகூர்
முதல் ஒருநாள் - நவ. 4, பைசலாபாத்
2 வது ஒருநாள் - நவ. 6, பைசலாபாத்
3 வது ஒருநாள் - நவ. 8, பைசலாபாத்