எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி மூடல்!
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி ஞாயிற்றுக்கிழமை(இன்று) மூடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் கடந்த 5 ஆம் தேதி உபரிநீர் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக வெளியேற்றப்பட்டது.
இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 23,300 கன அடியாக குறைந்த காரணத்தால் மேட்டூர் அணை உபரிநீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.
இதையும் படிக்க: சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!