``செங்கோட்டையனை உறுதியாகச் சந்திப்பேன்'' - ஓ.பன்னீர்செல்வம் பேசியது என்ன?
``டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும்.
10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று நேற்று முன்தினம் (செப்.5) கறாராகப் பேசியிருந்தார்.
சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் 'அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும்' என்ற கருத்தைத்தான் பெயர் குறிப்பிடாமல் அவர் வலியுறுத்தி இருந்தார்.
செங்கோட்டையன் இந்தக் கருத்தை முன்வைத்ததைத் தொடர்ந்து அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "தேர்தலுக்கு பணியாற்ற இன்னும் 7 மாதங்களே இருக்கிறது.
சில காலக்கட்டங்களில் சில அரசியல் மாற்றங்கள் வந்திருக்கலாம். சில மன வருத்தங்கள் கூட ஏற்பட்டிருக்கலாம்.
அதனை எங்களின் அகில இந்திய தலைமையுடன் பேசி தீர்த்திருக்கலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை, இன்னும் காலம் இருக்கிறது.

தினகரன் வெளியேறுவதற்கு நான் பொறுப்பாக முடியாது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்.
செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜக இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.