செய்திகள் :

"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" - புகழேந்தி காட்டம்!

post image

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன்" என்று கறாராக பேசிய அடுத்த நாளே கட்சியின் பொறுப்புகளிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக வெடித்திருக்கிறது.

அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு

இதற்கிடையில் செங்கோட்டையனை பொறுப்பிலிருந்து நீக்கியதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுக பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமைக்குக் கடிதம் அனுப்பி விலகி வருகின்றனர். இதுவரை ஈரோடு அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 2000 பேர் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை செங்கோட்டையனை நேரில் சந்தித்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு புகழேந்தி, "கட்சியின் நலனுக்காக நல்ல கருத்தை சொன்ன அண்ணன் செங்கோட்டையன் நீக்கப்பட்டிருக்கிறார். இது எவ்வளவு பெரிய அராஜகமான செயல்.

அதிமுக கட்சிக்கு எடப்பாடி பழனிசாமி ஒன்னும் சொந்தக்காரர் அல்ல. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவின் கட்சி, அதிமுக தொண்டர்களின் கட்சி. இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வேலுமணியும் பழனிசாமியோடு சேர்ந்து கட்சிக்கு எதிரக செயல்படுவது தவறானது. தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து எடப்பாடி பழனிசாமியை இயக்குகிறார்கள்.

புகழேந்தி

மூத்த தலைவர்கள், உண்மையான தொண்டர்களை, கட்சிக்காக உழைத்தவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு தனியாக பழனிசாமி என்ன செய்யப்போகிறார்.

அதிமுகவின் தலைவர்களில் பெரும்பான்மையானவர்கள் எங்கள் பக்கம்தான். உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் ஒன்றுசேர்ந்து செங்கோட்டையன் பக்கம் நிற்கிறோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சமரசம் பேசத் தயாராக இருக்கிறேன்'' -நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியிலிருந்த செங்கோட்டையன், "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் த... மேலும் பார்க்க

`அண்ணாமலை இருந்தவரை எல்லாம் சரியாக இருந்தது..!' - டிடிவி தினகரன்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

TVK : 'விஜய்யின் சுற்றுப்பயணத்தை காவல்துறை தடுக்க நினைக்கிறது!' - ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு

தவெக தலைவர் விஜய் வருகின்ற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்யும் முடிவில் இருக்கிறார். திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டு காவல்துறைய... மேலும் பார்க்க

"யானை, டிராகன் உடன் கரடியை விட புலி பொருத்தமாக இருக்கும்" - விலங்கு சின்னத்தில் அரசியல் பேசிய புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு பொருளாதார மாநாட்டில் பேசுகையில், முதல்முறையாக இந்தியா மற்றும் சீனாவின் உறவு வலுபெறுவதை 'யானை மற்றும் டிராகனின் நடனம்' என அழைத்தது ஜி ஜின்பிங் எனக் கூறியுள்ளார்.பி... மேலும் பார்க்க

ADMK: ``இது சர்வாதிகாரத்தின் உச்சம்'' - செங்கோட்டையன் பதவி நீக்கம் குறித்து ஓபிஎஸ் காட்டம்

செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட... மேலும் பார்க்க

`திமுக ஆட்சியில் அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது..!' - திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திண்டுக்கல்லில் வர்த்தகர் சங்கம் உட்பட 17 சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.இந்த கலந்த... மேலும் பார்க்க