செய்திகள் :

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியும் இவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆகாஷ்

இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாணவியின் வீட்டிலேயே இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும், ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 15 வயதான பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில், தற்கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகள... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க

டெல்லி செங்கோட்டை ஆன்மிக நிகழ்ச்சியில் ரூ.1.5 கோடி தங்க கலசங்கள் திருட்டு; மதகுருவாக வந்தவர் கைவரிசை

டெல்லி செங்கோட்டையில் ஒவ்வோர் ஆண்டும் ஜெயின் மத நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் செங்கோட்டை வளாகத்தில் தஸ்லக்ஷன் மஹாபர்வ் என்ற ஜெயின் ஆன்மிக நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி வ... மேலும் பார்க்க

பாமக: நூலிழையில் உயிர் தப்பிய ம.க.ஸ்டாலின்; காரில் தப்பிய 8 பேர்; 5 முறை போனில் பேசிய ராமதாஸ்

கும்பகோணம், ஆடுதுறை அருகே உள்ள மேலமருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். ஆடுதுறை பேரூராட்சி தலைவராக இருக்கும் இவர், பா.ம.க-வில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பத... மேலும் பார்க்க

மதுரை: `காவல் நிலையம் கட்டப்பஞ்சாயத்து செய்யுமிடமாக செயல்பட்டுள்ளது' - நீதிபதி காட்டம்!

"காவல் நிலையங்கள் வணிக ரீதியான பணப்பரிமாற்ற விவகாரங்களில் எப்படி கட்டப்பஞ்சாயத்து செய்கின்றன என்பதற்கு இந்த காவல் நிலையம் ஒரு உதாரணம்" என்று மதுரையிலுள்ள திலகர் திடல் காவல் நிலையத்தை குற்றம்சாட்டி உய... மேலும் பார்க்க

இன்ஸ்பெக்டர் லஞ்சம் கேட்ட விவகாரம்: நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை; சிபிஐ விசாரணை கோரி மனு

தன்னிடம் லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரத்துடன் புகார் அளித்தும், கண்டுகொள்ளாத லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை கேட்டுப் பாதிக்கப்பட்டவர் தொடர்ந்துள்ள வழக்கு பரபரப... மேலும் பார்க்க