பின்லேடனுக்காக அனுப்பப்பட்ட அதே குழுதான் வடகொரியாவுக்கும்? 2019-ல் அமெரிக்காவின் செயல்!
2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவு தொடர்பாக அமெரிக்கா முயற்சி செய்ததாக அமெரிக்க செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் வடகொரியாவில் உளவுபார்ப்பு சாதனத்தைப் பொருத்த அமெரிக்காவின் சீல் குழு 6 (US SEAL Team 6) முயற்சித்ததாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. இந்தக் குழுதான், ஒசாமா பின்லேடனை கொல்லவும் பணிக்கு உட்படுத்தப்பட்டது.
கடலுக்கடியில் நீந்தி, இலக்கின் கரையை அடைந்து, உளவுபார்ப்பு சாதனத்தை அங்கு பொருத்தி அல்லது நிலைநிறுத்திவிட்டு, ட்ரோன்கள் பார்வையில் இருந்து தப்பித்து மீண்டு வருவதுதான் இந்தக் குழுவின் பணி.
ஆனால், 2019-ல் வடகொரியாவின் கரையை அடைந்தபிறகு, வடகொரிய மீனவர்கள் வருவது தெரிந்தவுடன், படகில் இருந்தவர்களைக் கொன்று, அவர்களைக் கடலில் வீசியதாகவும் தகவல் தெரிவிக்கிறது. படகில் இருந்த மூவரும் நிராயுதபாணியான பொதுமக்கள் என்றும், அவர்களின் உடல் கடலில் மூழ்க வேண்டும் என்பதற்காக மார்பைக் கிழித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உளவுபார்ப்பு சாதனமும் பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரியாவில் மனிதர்களை உளவுபார்க்க வைப்பதோ அவர்களின் தலைமையைக் கண்காணிப்பதோ கடிது. அதுமட்டுமின்றி, வடகொரியாவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளின் தோல்வி அல்லது பணயக் கைதிகள் நிலைமைக்கு வழிவகுக்கும்.
இருப்பினும், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி எழுப்புகையில், அதனைப் பற்றி தெரியாது என்று அவர் மறுத்து விட்டார்.