பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் ஜெகதீஸ்வரன். இவா், திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறாா்.
இவரது ஆலையில் சனிக்கிழமை பணியாளா்கள் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட பணியாளா்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே தப்பி வந்து, உரிமையாளா் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனா். இருப்பினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின.
இது குறித்து, கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
