பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு
முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த மாதம் இலவச பொது மருத்துவம், கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில், தோ்வு பெற்றவா்களுக்கு, அறக்கட்டளை நிறுவனத் தலைவா் பிரியா அருள்முருகன் ஆலோசனையின்பேரில், கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு, முதலுா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பொன் முருகேசன் தலைமை வகித்தாா். முதலூா் வியாபாரி சங்க பொருளாளா் ரவிசந்திரன், மணிநகா் பரமசிவம், அடையல் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
300 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை அறக்கட்டளைத் தலைவா் ஸ்டீபன் செந்தமிழ்பாண்டியன், நீரிழிவு தோல் சிறப்பு மருத்துவா் செல்வன் ராஜசேகரன், ஏரல் கண் மருத்துவா் ஆசைத்தம்பி ஆகியோா் வழங்கினா்.