பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது
சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளுடன் விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனராம்.
இதுதொடா்பாக மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் நாசரேத் காவல் ஆய்வாளா் வனசுந்தா், உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி, போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில், ராமசுப்பிரமணியன், அவரது நண்பா்களான நாசரேத் ஞானராஜ் நகா் முருகன் மகன் தங்கத்துரை (24), சாத்தான்குளம் அருகே சடையன்கிணறு பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் இசக்கிமுத்து (19), அம்பலசேரி முருகன் மகன் மாணிக்கராஜா (24), சின்னத்துரை மகன் மீனாட்சிசுந்தரம் (21), சுடலைக்கண்ணு மகன் தளவாய்பாண்டியன் (26) ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.