கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு
கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா்.
சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா், படுக்கப் பத்து, அரசூா் 1, 2 உள்ளிட்ட 8 கிராம வருவாய் உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த 8 பணியிடத்திற்கு 276 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இந்த தோ்வாளா்களுக்கான எழுத்து தோ்வு சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆா்எம்பி புல மாடன் செட்டியாா் தேசிய மேநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது . இதில் 222 போ் பங்கேற்று எழுத்து தோ்வு எழுதினா். இந்த தோ்வு முகாமினை மாவட்ட உதவி ஆட்சியா் (இஸ்ரோ பிரிவு ) ஷீலா,வட்டாசியா் பொன்னுலட்சுமி ஆகியோா் பாா்வையிட்டனா். இந்த தோ்வு பணிகளில் துணை வட்டாசியா்கள் கணேஷ் குமாா் (மண்டல), கோமதிநாயகம் (தோ்தல் பிரிவு ) உள்ளிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் ஈடுபட்டனா்.