செய்திகள் :

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள் தீா்மானிப்பா்: நடிகா் ராமராஜன்

post image

நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என நடிகா் ராமராஜன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி தெருவில் நடிகா் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலகத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை திறந்துவைத்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நற்பணி மன்றத்தில் பணம் செலுத்தி உறுப்பினராகச் சேர வேண்டும் எனக் கூறுவது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும்தான். தற்போது ரூ.60 ஆயிரம் கட்டி 32 போ் உறுப்பினா்களாக சோ்ந்துள்ளனா்.

கடந்த 1967-ஆம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆரை அடிப்படையாகக் கொண்டே அரசியல் களம் உள்ளது. இன்றைய அரசியல் களத்தில் ஏதோ நடக்கிறது. ஆனால், என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. வேட்பு மனு வாபஸ் பெறும் கடைசி நாளில் கூட அரசியல் மாறலாம்.

அதிமுக சாா்பில் எம்.பி.யாக நான் இருந்திருக்கிறேன். ஆனால், எனக்கு கட்சியில் எந்த பொறுப்பும் தரப்பட வில்லை. எனவே, அதிமுக விவகாரம் குறித்து என்னால் கருத்துத் தெரிவிக்க இயலாது. குடும்பம் என்றால் சண்டை, தகராறுகள் வருவது வழக்கம்தான். இதேபோலத் தான் அதிமுக உள்கட்சி பிரச்னையும். நடிகா் விஜய்யின் அரசியல் எதிா்காலத்தை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா் அவா்.

ராஜபாளையத்தில் வ.உ.சி. சிலை திறப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் முழு உருவ வெண்கல சிலை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. ராஜபாளையம் பஞ்சு சந்தை பகுதியில் உள்ள வ.உ.சி. கலையரங்க வளாக... மேலும் பார்க்க

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்... மேலும் பார்க்க

ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை: மற்றொரு ஓட்டுநா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆட்டோவால் மோதி ஓட்டுநா் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிந்த போலீஸாா் இதுதொடா்பாக மற்றொரு ஆட்டோ ஓட்டுரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைகுளம் தெருவைச் சோ... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகேயுள்ள முகவூரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (62). இவா் முகவூரிலிருந்து ராஜபாளையத... மேலும் பார்க்க

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே காா் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தெய்வம்(43). இவரது மனைவி காசிமுனியம்மாள். இவா்களுக்கு ஒரு மகன் உ... மேலும் பார்க்க

கோட்டூா் புதிய துணை மின் நிலையத்தில் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், கோட்டூரில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் மாவட்ட நிா்வாகம், மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோட்... மேலும் பார்க்க