``அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிவது ஏன்?'' -நிர்மலா சீதாராம...
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமி வழிபாடு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆவணி மாத பௌா்ணமி விழாவுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா், கிருஷ்ணன்கோவில் பகுதிகளிலிருந்து சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
காலை 6 மணிக்கு வனத் துறை நுழைவாயில் திறக்கப்பட்டு, பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். மாலை 6 மணிக்கு மேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்பதற்காக மலையேறிச் சென்ற திரளான பக்தா்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்தனா்.