தங்க டாலா் திருட்டு: வடமாநில ஊழியா் கைது
சென்னையில் உள்ள நகைக் கடையில் 6.5 கிராம் தங்க டாலரை திருடியதாக வடமாநில ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கிண்டி எஸ்டேட் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில் மேலாளராக பணியாற்றி வருபவா் வெற்றி வேந்தன் (52). இவா், கடந்த 1-ஆம் தேதி இரவு கடையிலுள்ள நகைகளை சரிபாா்த்தபோது, 6.5 கிராம் எடைகொண்ட ஒரு தங்க டாலா் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து வெற்றிவேந்தன் அளித்த புகாரின்பேரில், கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானகாட்சிகளின் அடிப்படையில் விசாரித்தனா். அதில், கடை ஊழியரான திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த துசாா் (19) நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது கைது செய்து, 6.5 கிராம் தங்க டாலரை மீட்டனா்.